/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள்/ மார்ச் 26 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சிகள்/ மார்ச் 26 க்குரியது
ADDED : மார் 26, 2025 03:54 AM
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00மணி.
சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
கோயில்
அவிட்டத்தின் அவதாரம், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திர வழிபாடு, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:30 மணி.
பள்ளி, கல்லுாரி
வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர்குமரேஷ், பங்கேற்பு: பயிற்சியாளர் முகிலன், ஏற்பாடு: முதுகலை கணினி பயன்பாட்டுத் துறை, கல்லுாரி வேலைவாய்ப்பு மையம், காலை 10:30மணி, வரி விதிப்பில் சமீபத்திய மாற்றங்கள் -குறித்த கருத்தரங்கு, பங்கேற்பு: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பேராசிரியர் சர்மிளா, ஏற்பாடு:வணிகவியல் துறை, மதியம் 12:30 மணி.
நுால்கள் வழங்கும் விழா: அல்அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார், மதுரை, தலைமை: தலைமையாசிரியர் ஷேக் நபி, பங்கேற்பு: மன்ற ஆலோசகர் கருணாகரன், ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், ஏற்பாடு: இளங்கோ முத்தமிழ் மன்றம், காலை 10:30 மணி.
கவின் கலை போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: பொருளாதார துறைத் தலைவர் பிரெட்ரிக், காலை 10:00 மணி.
காசநோய் அடிப்படைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சி: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு டாக்டர் மகேஷ்குமார், ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., காலை 10:30 மணி.
பொது
தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் வழங்கும் பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் - மாணவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
போலீஸ் கரங்கள்- ஆதரவற்ற முதியோருக்கு இலவச உணவு, இருப்பிட சேவை வழங்குதல்: கமிஷனர் அலுவலகம், மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதியம் 1:00 மணி.
மருத்துவம்
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணிமுதல்.
பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.
கண்காட்சி
பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.