ADDED : ஜூன் 22, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிரீன் மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் நத்தம் ரோடு பேட்டைகுளம் வித்யா விநாயகர் கோயில் காடு பசுமை வளாகத்தில் 'மரங்கள் அறியும் பயணம்' இன்று (ஜூன் 22) மதியம் நடக்கிறது.
அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் மரங்களைப் பற்றி விளக்குகிறார். ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திலிருந்து மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். முன்பதிவுக்கு: 91591 53233.

