ADDED : ஜன 24, 2024 05:43 AM
கோயில்
தெப்பத் திருவிழா 11வது நாள்-கதிரறுப்புத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, காமராஜர் சாலை, கீழவெளி வீதி, சிந்தாமணி ரோடு, கதிரறுப்பு மண்டபம், காலை 9:00 மணி; சிந்தாமணி ரோடு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி, மதியம் 2:00 மணி.
தைப்பூச திருவிழா 9வது நாள்: அறுபடை வீடு முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், யாகசாலை பூஜை, தீபாராதனை, காலை 7:00 மணி, தங்கத் தேரோட்டம், காலை 9:30 மணி, வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.
வருடாபி ேஷக விழா: சித்தி விநாயகர் கோயில், ரமண ஸ்ரீ கார்டன், ஜீவா நகர், மதுரை, கணபதி ேஹாமம், தீபாராதனை, காலை 6:30 மணி, விநாயகர் வீதி உலா, மாலை 6:00 மணி.
தைப்பூச ஜோதி தரிசனம்: வள்ளலார் முதியோர் இல்லம், அனுப்பானடி, மதுரை, காலை 9:00 மணி.
தைப்பூச விழா சன்மார்க்க கொடியேற்றம்: சத்திய ஞான சபை, அனுப்பானடி, மதுரை, வள்ளலார் பூஜை, காலை 8:00 மணி.
கும்பாபி ேஷகம்: நாகசுந்தர சித்தி விநாயகர் கோயில், முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 10:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
காவடி ஆட்டம், ஆண்டிபாலகர் கோயில், செம்மனிபட்டி, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர்: விஜயராமன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
ஈசாவாஸ்ய, உபநிஷதம், வேதாந்தம்: நிகழ்த்துபவர்: ஜனார்த்தனான் ஜீ, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் துவக்க விழா: கீழக்கரை, அலங்காநல்லுார், தலைமை: முதல்வர் ஸ்டாலின், காலை 10:00 மணி.
கண்ணன் காபி துவக்க விழா: லட்சுமி புட்ஸ், அப்போலோ மருத்துவமனை எதிரில், கே.கே.நகர், மதுரை, பங்கேற்பு: கண்ணன் ஜூப்ளி காபி நிறுவன நிர்வாக பங்குதாரர் ஜெயகுமார், பங்குதாரர் சங்கர் கிருஷ்ணன், மதுரை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குமார், காலை 9:15 மணி.
பள்ளி, கல்லுாரி
தேசிய பெண் குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்: திருப்பாலை - ஊமச்சிகுளம், ஏற்பாடு: யாதவா ஆண்கள் கல்லுாரி, பங்கேற்பு: முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் கண்ணன், காலை 8:30 மணி; கருத்தரங்கு: பேசுபவர்: மனநல டாக்டர் சைலஜா, ஏற்பாடு: மாணவிகள் நலக்குழு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மையம், மதியம் 2:30 மணி.
மன்னர் திருமலை நாயக்கரின் 441 வது பிறந்தநாள் விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: இந்திரா ஜெயச்சந்திரன், பங்கேற்பு: செயலாளர் விஜயராகவன், மதியம் 12:00 மணி.
தேசிய பெண் குழந்தைகள் தின விழா: சாமநத்தம், இயற்கை உணவு பயன்பாடு விழிப்புணர்வு: அஞ்சுகுடி, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.
கம்ப்யூட்டர் பயன்பாடு சமீபத்திய போக்குகள் - கருத்தரங்கு: யாதவா பெண்கள் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை எச்.சி.எல்.,மைய தலைவர் திருமுருகன் சுப்புராஜ், அமெரிக்கா விப்ரோ முதன்மை மேலாளர் ஷியாம் சுந்தர், காலை 10:00 மணி.
கண்காட்சி
காட்டன் பேப்-பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை.
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.
ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
விளையாட்டு
கேலோ இந்தியா தேசிய விளையாட்டுப் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 9:00 மணி.

