/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்ச்சுவரியில் 'காத்திருப்போர் அறை'
/
மார்ச்சுவரியில் 'காத்திருப்போர் அறை'
ADDED : ஜூன் 15, 2025 05:47 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் காத்திருப்போர் அறை, கூடுதல் பிணவறை கட்டடம் என இரு கட்டமாக கட்டுவதற்கு ரூ.92 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது மார்ச்சுவரியில் 34 உடல்களை வைப்பதற்கான 'ப்ரீசர்' வசதியுடன் கூடிய கட்டடம் உள்ளது.
தண்ணீர் வசதியுடன் நான்கு கழிப்பறைகள் மட்டும் வெளிப்பகுதியில் உள்ளது. வெளிப்பகுதியில் காத்திருப்போர் அறை இல்லாததால் உடலை வாங்க வரும் உறவினர்கள் வெயில், மழையில் காய்ந்தும் நனைந்தும் நின்று கொண்டே அவதிப்படுகின்றனர். குடிநீரும் கிடைப்பதில்லை.
இந்நிலையில் கூடுதலாக பிணவறை கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலை தற்போது நடக்கிறது. இதில் நான்கு வரிசைகளில் 24 உடல்களை 'ப்ரீசரில்' பாதுகாக்க முடியும். அருகிலேயே 200 பேர் அமரும் வகையில் காத்திருப்போர் அறை, குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ரூ.92 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் அறை கட்டி முடித்ததும் மார்ச்சுவரியின் வாசல் பகுதி மூடப்பட்டு அருகில் புதிய வாசல் திறக்கப்படும்.