/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் எப்போது எம்.எல்.ஏ., கேள்வி

ADDED : பிப் 25, 2024 04:57 AM
திருப்பரங்குன்றம் : 'திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்தாண்டு கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. எப்போது பணிகள் துவங்கும்' என தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றத்தில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தில் 76 பேருக்கு விபத்து காப்பீட்டு பாலிசி வழங்கி கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டம் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் பணிகள் துவக்கப்படவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம், அவனியாபுரம் - நெல்பேட்டை வரை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலைமேல் ரோப் கார் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் அறிவுப்புடன் நின்று விடாமல் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் தேர்தலை எதிர்கொள்வதிலும், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டுவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார். மக்கள் பணியாற்ற அவர் சிந்திக்கவில்லை. மக்கள் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.