/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் பெண் கவுன்சிலர் எச்சரிக்கை
/
மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் பெண் கவுன்சிலர் எச்சரிக்கை
மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் பெண் கவுன்சிலர் எச்சரிக்கை
மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் பெண் கவுன்சிலர் எச்சரிக்கை
ADDED : ஜன 19, 2024 05:16 AM
மதுரை: மதுரையில் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி முன் அனுமதியின்றி பெட்டிக்கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கமிஷனர்மதுபாலனிடம் அ.தி.மு.க., 30வது வார்டு கவுன்சிலர்வசந்தாதேவி புகார் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
செனாய் நகர் சேவாலயம் ரோட்டில் மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவரை ஆக்கிரமித்து ஆளும்கட்சி ஆதரவுடன் கடைகள் வைக்க துவங்கியுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் போது இந்த இடம், அரசு மருத்துவமனை வளாகம் முன் உள்ளிட்ட பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில், தற்போது ஆளும்கட்சி ஆதரவில் மீண்டும் ஆக்கிரமித்து பெட்டிக் கடைகள் வைக்க துவங்கியுள்ளனர்.
ஏற்கனவே ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளில் மாணவர்களுக்கு போதை மாத்திரை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த விவகாரம் வெளியானது.
மீண்டும் அதுபோன்று நடக்காமல் இருக்க ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. மீறி வைக்க அனுமதித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

