/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பாலத்தில் பைக் மோதியதில் வாலிபர் பலி; இருவர் படுகாயம்
/
பாலத்தில் பைக் மோதியதில் வாலிபர் பலி; இருவர் படுகாயம்
பாலத்தில் பைக் மோதியதில் வாலிபர் பலி; இருவர் படுகாயம்
பாலத்தில் பைக் மோதியதில் வாலிபர் பலி; இருவர் படுகாயம்
ADDED : ஜூன் 06, 2025 02:48 AM
மயிலாடுதுறை,:சீர்காழி அருகே ஆற்று பாலத்தில் பைக் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 28, மெக்கானிக். இவர், அதே பகுதியை சேர்ந்த இளவரசன், 26, மணிகண்டன், 25, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, 'யமஹா' பைக்கில் சீர்காழி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
வெள்ளபள்ளம் உப்பனாற்று பாலத்தில் வந்தபோது, பாலத்தில் திடீரென பைக் மோதியது. இதில் பைக்கில் வந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, மெக்கானிக் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து திருவெண்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.