/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
இறுதி சடங்கிற்கு பணம் இல்லை தாயின் உடலை வீசிய மகன்கள்
/
இறுதி சடங்கிற்கு பணம் இல்லை தாயின் உடலை வீசிய மகன்கள்
இறுதி சடங்கிற்கு பணம் இல்லை தாயின் உடலை வீசிய மகன்கள்
இறுதி சடங்கிற்கு பணம் இல்லை தாயின் உடலை வீசிய மகன்கள்
ADDED : ஜூன் 29, 2025 02:16 AM
வேளாங்கண்ணி,:நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லுார் கடற்கரை சாலையில் உள்ள தைலமர தோப்பில், கடந்த 27ம் தேதி சந்தேகத்திற்கிடமாக சாக்கு மூட்டை கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. நாகை டவுன் போலீசார், மூட்டையை பிரித்தபோது அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது.
விசாரணையில், மகன்களே தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:
வேளாங்கண்ணி, ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த உசேன் மனைவி மும்தாஜ், 75. தம்பதியருக்கு செய்யது, 45, சுல்தான் இப்ராகிம், 43, என்ற இரு மகன்கள், ஜீனத்தம்மாள், 54, என்ற மகள் உள்ளனர். மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். ஏப்ரலில் வயது முதிர்வால் உசேன் இறந்தார்.
மும்தாஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன் இறந்துள்ளார். தாயை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், மனநலம் பாதித்த மகன்களே மும்தாஜ் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, வடக்கு பொய்கைநல்லுார் காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.