/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண்இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு
/
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண்இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண்இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண்இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு
ADDED : மார் 26, 2025 01:52 AM
விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண்இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு
ராசிபுரம்:ராசிபுரம், நாமகிரிப்பேட்டை வட்டார அனைத்து கிராம விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பகுதிகளில் வேளாண்துறை அலுவலர்கள் மூலம் இப்பணி நடக்கிறது. நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம் மற்றும் நில உடமை வாரியான விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக்குறியீடு எண் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து நடக்கும் இந்த முகாமில் கலந்து கொள்ளும் விவசாயிகள், நில ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைந்த தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என, வேளாண்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பதிவை விரைவாக்க சி.எஸ்.சி., எனப்படும் பொதுசேவை மயங்களிலும் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்தத பகுதியில் உள்ள சி.எஸ்.சி., மையங்களில் விவசாயிகள் பதிவு செய்துகொள்ள வேளாண் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.