/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில்பிஞ்சு கரங்களின் கையில் மருதாணி
/
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில்பிஞ்சு கரங்களின் கையில் மருதாணி
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில்பிஞ்சு கரங்களின் கையில் மருதாணி
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில்பிஞ்சு கரங்களின் கையில் மருதாணி
ADDED : மார் 26, 2025 02:20 AM
கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில்பிஞ்சு கரங்களின் கையில் மருதாணி
கரூர்:கரூர், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கோடை வெயிலை சமாளிக்க மாணவ, மாணவியர் மருதாணி அணிந்து வந்தனர்.
கரூர் அருகே கவுண்டபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலை பாதிப்புகளை தற்காத்து கொள்ளவும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
அதில், வெயில் காலங்களில் உடல் சூட்டினை தவிர்க்க எளிய வழிகளில் ஒன்று மருதாணி வைப்பது, அந்த நல்ல பழக்கத்தை மாணவர், மாணவியர் கோடைகாலங்களில், 15 நாட்களுக்கு ஒரு முறை கடைபிடிக்க வேண்டும். மருதாணி இலையின் மருத்துவ குணம் பயன்பாடுகள் பற்றிய தகவலை தலைமையாசிரியர் பரணிதரன், மாணவர்களிடம் எடுத்து கூறினார். அதனை ஏற்று நேற்று, மாணவ, மாணவியர் கையில் மருதாணி வண்ணத்துடன் வந்திருந்தனர்.
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து மருதாணி வைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.