sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிட்டிங் வாலிபால் போட்டிஹரியானா அணி முதலிட

/

சிட்டிங் வாலிபால் போட்டிஹரியானா அணி முதலிட

சிட்டிங் வாலிபால் போட்டிஹரியானா அணி முதலிட

சிட்டிங் வாலிபால் போட்டிஹரியானா அணி முதலிட


ADDED : மார் 25, 2025 01:00 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்டிங் வாலிபால் போட்டிஹரியானா அணி முதலிடம்

திருச்செங்கோடு:இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன், இந்தியன் பாராலிம்பிக் கமிட்டி, தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேஷன் ஆகியவற்றின் சார்பில், 13-வது தேசிய சீனியர் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப்-2025 போட்டி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மகளிர் இறுதிப்போட்டியில், ஹரியானா அணியும், ஜார்க்கண்ட் அணியும் மோதின. இதில், 25:22, 25:17 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் அணி, இரண்டாவது பரிசு, கர்நாடகா அணி, மூன்றாவது பரிசு, ராஜஸ்தான் அணி, நான்காவது பரிசு பெற்றன.

ஆடவர் இறுதிப்போட்டியில், ஹரியானா அணியும், கர்நாடகா அணியும் விளையாடின. இதில், 25:20, 25:23, 25:14 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா அணி வெற்றி பெற்றது. கர்நாடகா அணி, இரண்டாவது பரிசு, ராஜஸ்தான் அணி, மூன்றாவது பரிசு, தமிழ்நாடு அணி, நான்காவது பரிசு பெற்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் சிறப்பிடம் பிடித்த வீரர்,- வீராங்கனைகள், சர்வதேச பாரா சிட்டிங் வாலிபால் போட்டியில், இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us