/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு
/
த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு
ADDED : மார் 26, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு
குளித்தலை:குளித்தலை, காந்தி சிலை எதிரில் த.வெ.க., நகர இளைஞரணி சார்பில், கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
இளைஞரணி செயலர் வழக்கறிஞர் வாலாந்துார் காமராஜ் தலைமை வகித்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன், இணை செயலர் சதாசிவம் ஆகியோர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு தர்பூசணி, நீர் மோர், பானகம் ஆகியவைகளை வழங்கினர். மாவட்ட மகளிர் அணி துணை செயலர் கோமதி, நகர செயலர் விஜயகுமார், நகர பொறுப்பாளர் முரளி, மகளிர் அணி பொறுப்பாளர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.