/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் 'குதுாகலம்'
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் 'குதுாகலம்'
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் 'குதுாகலம்'
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் 'குதுாகலம்'
ADDED : மார் 26, 2025 01:54 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் 'குதுாகலம்'
நாமக்கல்:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த, 3ல் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், ஏழு அரசு உதவிபெறும் பள்ளி, 95 அரசுப்பள்ளி, நான்கு அரசு உதவிபெறும் (பகுதி அளவு) பள்ளி, 92 தனியார் பள்ளிகள் என, 198 பள்ளிகளை சேர்ந்த, மொத்தம், 18,104 மாணவ, மாணவியர், டுடோரியல் மாணவர்கள், 59 பேர் என மொத்தம், 18,163 பேர் தேர்வு எழுதினர். இதற்காக, 86 மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
கடந்த, 6ல், மொழித்தாள் தேர்வு முடிந்தது. தொடர்ந்து, 11 முதல் முக்கிய பாடத்தேர்வுகள் துவங்கின. நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. மாணவ, மாணவியர் இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் ஆகிய தேர்வுகளை எழுதினர்.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், நேற்று கடைசி தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், தேர்வு அறையில் இருந்து வெளியே வந்தவுடன், வினாத்தாள்களை பறக்கவிட்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.