/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு: எம்.பி., பெருமிதம்
/
அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு: எம்.பி., பெருமிதம்
அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு: எம்.பி., பெருமிதம்
அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு: எம்.பி., பெருமிதம்
ADDED : ஜன 11, 2024 12:00 PM
நாமக்கல்: ''அமைச்சர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு, 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை, முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நேற்று துவங்கியது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி., ராஜேஸ்குமார் போட்டியை துவக்கி வைத்து பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர்களை உருவாக்குதல் என பல்வேறு துறைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அமைச்சர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு, 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.
தற்போது, மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளான -கால்பந்து, கையுந்து பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள், இரண்டு நாட்கள் நடக்கின்றன. கபடி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, 20,000, 10,000, 5,000 ரூபாய் பரிசும், கால்பந்து போட்டிக்கு, 25,000, 20,000, 10,000 ரூபாய் பரிசும், கையுந்து பந்து போட்டிக்கு, 15,000, 10,000, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான கபடி போட்டியில், ஆண்கள் பிரிவில், 58 அணி, பெண்கள் பிரிவில், 15 அணி, கால்பந்து போட்டியில், ஆண்கள், 20 அணி, பெண்கள், 9 அணி, கையுந்து பந்து போட்டியில், ஆண்கள், 30 அணி, பெண்கள், 10 அணி என, மொத்தம், 139 அணிகள் பங்கேற்கின்றன.

