/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'குழந்தை திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்'
/
'குழந்தை திருமணம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்'
ADDED : ஜன 24, 2024 11:14 AM
நாமக்கல்: 'குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், பொது மக்களின் நலன் காக்கும் வகையில், சுகாதாரத்துறையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும்-48 என, பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அரசின் தீவிர நடவடிக்கையால், தற்போது போலியோ நோய்த்தொற்று முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில், அனைவரது வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடம் பயன்படுத்த வேண்டும். இதனால், பல்வேறு நோய்த்தொற்றுகளை நாம் தவிர்க்க முடியும்.
பள்ளியில், குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஆசிரியர்கள் கண்காணித்தால், ஆரம்ப நிலையிலேயே அவர்களுக்கு ஏதேனும் உடல் மற்றும் மனதளவில் குறைபாடுகள் காணப்பட்டால், அவற்றை குணப்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சியை நாம் உருவாக்க முடியும்.
குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்த்திடும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பஞ்., தலைவர் சாரதா, நகராட்சி தலைவர்கள் கலாநிதி, நளினி, சேலம், குடும்ப நலத்துறை இணை இயக்குனர் வளர்மதி, துணை இயக்குனர்கள் வாசுதேவன், ஜெயந்தினி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

