/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்
/
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்
ADDED : செப் 15, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகள் சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் நலன் கருதி வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

