/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உயிருக்கு ஆபத்து என கூறி தி.மு.க., பெண் கவுன்சிலர், கணவருடன் தர்ணா
/
உயிருக்கு ஆபத்து என கூறி தி.மு.க., பெண் கவுன்சிலர், கணவருடன் தர்ணா
உயிருக்கு ஆபத்து என கூறி தி.மு.க., பெண் கவுன்சிலர், கணவருடன் தர்ணா
உயிருக்கு ஆபத்து என கூறி தி.மு.க., பெண் கவுன்சிலர், கணவருடன் தர்ணா
ADDED : ஜன 14, 2024 12:31 PM
நாமக்கல்: உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, தி.மு.க., ஒன்றிய பெண் கவுன்சிலர், தன் கணவருடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. தி.மு.க.,வை சேர்ந்த இவர், 1வது வார்டு யூனியன் கவுன்சிலராக உள்ளார். அவரது கணவர் முருகேசன் டேங்கர் லாரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முருகேசன், அவரது மனைவி தமிழ்ச்செல்வியும், தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை, 5:00 மணியளவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நல்லிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தான் டேங்கர் லாரி தொழிலில் ஈடுபடுவதாவும், தன்னுடன் கூட்டு சேர்ந்து லாரி தொழிலில் ஈடுபடும் நபரால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இருவரையும் சமரசம் செய்த போலீசார், புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.