/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் பழக்கம் சமூகத்தை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும்'
/
போதைப்பொருள் பழக்கம் சமூகத்தை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும்'
போதைப்பொருள் பழக்கம் சமூகத்தை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும்'
போதைப்பொருள் பழக்கம் சமூகத்தை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும்'
ADDED : ஜூன் 26, 2025 01:30 AM
நாமக்கல், ''போதைப்பொருள் பழக்கம், ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமின்றி, ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும் ஆபத்தான ஒன்று,'' என, மாவட்ட மனநல திட்ட சிறப்பு நிபுணர் பிரஷாந்தினி பேசினார்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மன நல திட்ட சிறப்பு நிபுணர் பிரஷாந்தினி பேசியதாவது:
போதை பழக்கம், இளைய தலைமுறையை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக, போதைப்பொருளின் தாக்கத்தால், உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கும். இதன் காரணமாக, சமூகத்திலும், குடும்பங்களிலும் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும். போதைப் பொருள் பழக்கம், ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமின்றி, ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் அழிவின் பாதைக்கு இழுத்துச்செல்லும் ஆபத்தான ஒன்று. மாணவர்கள் இந்த ஆபத்தான பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான, பொறுப்புள்ள வாழ்வை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
ஏற்பாடுகளை, யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.