/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
/
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : ஜூன் 27, 2025 01:18 AM
நாமக்கல், நாமக்கல்லில், சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
ஆண்டுதோறும் ஜூன், 26ம் தேதி சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நடந்த நிழ்ச்சிக்கு, மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமையில், மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின், போதைஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் ஏற்றுக்கொண்டனர்.
ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., தனராசு, கலால் உதவி ஆணையர் ராஜேஸ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, உதவி இயக்குனர் (நில அளவை) ஜெயச்சந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் காயத்திரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தனியார் கல்லுாரி மாணவியர் பங்கேற்று, பாலம் சாலை, ஒன்பதாம்படி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்றனர்.
பேரணியில், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் அவற்றினால் ஏற்படும் தீமைகள், எவ்வாறு தடுப்பது என்பது குறித்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
* குமாரபாளையம், அரசு கலை அறிவியல் கல்லுாரி, தனியார் கல்லுாரி மற்றும் தமிழ் சிந்தனை பேரவை சார்பில், விழிப்புணர்வு பேரணி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது. தாசில்தார் சிவகுமார், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொ) சரவணாதேவி, தமிழ் சிந்தனை பேரவை ரமேஷ்குமார் உள்பட பலர் பேரணியை துவக்கி வைத்தனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புனர்வு தொடர்பாக பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ராஜம் தியேட்டர் முன் தொடங்கிய பேரணி, சேலம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று, தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
* திருச்செங்கோட்டில் நடந்த, போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு, டவுன் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்ட், வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பின், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
* புதன்சந்தை அருகே செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், நல்லிபாளையம் காவல் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வரதராஜன் முன்னிலை வகித்தார். பின் போதை தடுப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எஸ்.ஐ., பாலமுருகன், உதவி தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.