sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முத்தாளம்மன், காளியம்மன் கோவிலில் குண்டம் விழா

/

முத்தாளம்மன், காளியம்மன் கோவிலில் குண்டம் விழா

முத்தாளம்மன், காளியம்மன் கோவிலில் குண்டம் விழா

முத்தாளம்மன், காளியம்மன் கோவிலில் குண்டம் விழா


ADDED : செப் 02, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்:மோகனுார் அடுத்த மணப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட மேலபேட்டபாளையத்தில் முத்தாளம்மன், சந்தியப்பன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா கோலாகலாக நடக்கிறது.

அதன்படி, இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் போடப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, அக்னி சட்டி எடுத்தும், தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், நாளை மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us