/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசிபோட உத்தரவு
/
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசிபோட உத்தரவு
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசிபோட உத்தரவு
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசிபோட உத்தரவு
ADDED : ஜூன் 25, 2025 01:28 AM
பள்ளிப்பாளையம்,
பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட கலியனுார் பஞ்.,ல் ஆவத்திபாளையம், சுபாஷ் நகர், கலியனுார், கரட்டாங்காடு உள்ளிட்ட பஞ்., பகுதி முழுவதும் வெறிநாய்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த, மே, 23ல் சுபாஷ் நகரில் வெளியே விளையாடிக்கொண்டிருந்த, 14 வயது சிறுமியை வெறிநாய் கடித்தது. இதேபோல், பிப்., 24ல், கலியனுார் பகுதியில் வெறிநாய் கடித்து, மகேஸ்வரனுக்கு சொந்தமான ஒரு ஆடு இறந்தது. கடந்த, 6ல் வெறிநாய் கடித்து, இவருக்கு சொந்தமான கோழிகள் இறந்தன.
இதனால், கலியனுார் பஞ்., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
கலியனுார் பஞ்.,ல் நாய் தொல்லை அதிகம் இருப்பதால்,
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அதனால், பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களை, வெளியில் விடாமல் தடுப்பூசி செலுத்தி, அதன் உரிமையாளர் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள
வேண்டும்.
மேலும், நாய்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொண்டு பஞ்.,ல் பதிவு செய்ய வேண்டும். ஆடு, மாடு, கால்நடைகளை சொந்த இடத்தில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். வெளியில் சுற்றும் நாய்களை, கால்நடை மருத்துவர் மூலம் கருத்தடை செய்ய பஞ்., நிர்வாகம் மூலம் ஆவன செய்யப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்
பட்டுள்ளது.