/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பல நாட்களாக திட்டமிட்டு நகைக்காக மூதாட்டி கொலை: குற்றவாளி வாக்குமூலம்
/
பல நாட்களாக திட்டமிட்டு நகைக்காக மூதாட்டி கொலை: குற்றவாளி வாக்குமூலம்
பல நாட்களாக திட்டமிட்டு நகைக்காக மூதாட்டி கொலை: குற்றவாளி வாக்குமூலம்
பல நாட்களாக திட்டமிட்டு நகைக்காக மூதாட்டி கொலை: குற்றவாளி வாக்குமூலம்
ADDED : ஜூன் 24, 2025 01:54 AM
பள்ளிப்பாளையம், 'பல நாட்களாக திட்டமிட்டு, நகைக்காக மூதாட்டியை கொலை செய்தேன்' என, போலீசில் குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த பாதரையை சேர்ந்தவர் கண்ணம்மாள், 80; இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் தறித்தொழிலாளியான சங்கர், 29, என்பவர், மூதாட்டி வீட்டில் புகுந்து, கண்ணம்மாளின் வாயில் துணியை வைத்து அடைத்து கொலை செய்துவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த, முக்கால் பவுன் தோட்டை திருடியுள்ளார். அப்போது அப்பகுதி மக்களிடம் சிக்கிய சங்கரை பிடித்து, வெப்படை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, வெப்படை போலீசார் கூறியதாவது: மூதாட்டி கண்ணம்மாளின் வீட்டிற்கு எதிரே வசித்ததால், சங்கர் அவருடன் சகஜமாக பழகி வந்துள்ளார். இதனால், அடிக்கடி கண்ணம்மாள் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். மூதாட்டி கண்ணம்மாள், காதில் தங்க தோடு அணிவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். சங்கருக்கு கடன் தொல்லை அதிகரித்து சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மூதாட்டி அணிந்துள்ள தோட்டை திருடி கடனை அடைக்க திட்டம் தீட்டி, அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த சங்கர், வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியின் வாயை துணியால் பொத்தி கொலை செய்துவிட்டு, தோடை திருடியுள்ளார். ஆனால், பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.