/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
/
மோகனூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
ADDED : ஜன 14, 2024 12:36 PM
மோகனுார்: மோகனுார் ஒன்றியம், பரளி பஞ்., மல்லுமாச்சம்பட்டியில், புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
மோகனுார் ஒன்றிய முன்னாள் சேர்மனும், அட்மா திட்ட தலைவருமான நவலடி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, ஒன்றிய சேர்மன் சரஸ்வதி, ஒருவந்துார் பஞ்., முன்னாள் தலைவர் வக்கீல் கைலாசம், அரசு வக்கீல் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், புதிய பகுதி நேர ரேஷன் கடையை, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து, 196 கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பான, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுகரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கினார்.
அதையடுத்து, துாய்மை காவலர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பஞ்., தலைவர் அருக்காணி, தாசில்தார் மணிகண்டன், பி.டி.ஓ., முனியப்பன், ஒன்றிய கவுன்சிலர் வேலுபாலாஜி, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

