/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் வடிகாலுடன் தார்சாலை பணி பிரச்னைக்கு தீர்வால் மக்கள் மகிழ்ச்சி
/
கழிவுநீர் வடிகாலுடன் தார்சாலை பணி பிரச்னைக்கு தீர்வால் மக்கள் மகிழ்ச்சி
கழிவுநீர் வடிகாலுடன் தார்சாலை பணி பிரச்னைக்கு தீர்வால் மக்கள் மகிழ்ச்சி
கழிவுநீர் வடிகாலுடன் தார்சாலை பணி பிரச்னைக்கு தீர்வால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 23, 2025 05:04 AM
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி, மோகனுார் சாலையில், 34, 35வது வார்-டுக்கு உட்பட்ட அழகு நகரிலிருந்து, கூட்டுறவு காலனிக்கு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி வழியாக, அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
இச்சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகி-றது. வாகன ஓட்டிகள் தடுமாறி செல்வதுடன், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஆனால், எவ்வித நடவடிக்-கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், எம்.எல்.ஏ., ராமலிங்கத்திடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கழிவுநீர் வடிகாலுடன், தார்சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டார். அப்பணி ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.
இதற்கிடையில், கழிவுநீர் வடிகாலுடன் தார்சாலை அமைக்கும் பகுதியை, எம்.எல்.ஏ., ராமலிங்கம் நேற்று ஆய்வு செய்தார். அப்-போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்-தினார்.
மாநகராட்சி கவுன்சிலர் கமலா, தி.முக., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் இளம்பரிதி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் உமாசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். பல ஆண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண உள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.