/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்கல் தொகுப்பு இன்று முதல் வினியோகம்
/
பொங்கல் தொகுப்பு இன்று முதல் வினியோகம்
ADDED : ஜன 10, 2024 11:14 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு, இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட, தலா, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணம், பொங்கல் பரிசாக வழங்க, தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு தொகுப்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, மற்ற ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம், நேற்றுடன் முடிந்தது. இன்று முதல், 14 வரை தொடர்ச்சியாக, பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு, ரேஷன்கடை விற்பனை முனைய இயந்திரத்தில் பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும்.
ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில், யாராவது ஒருவர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதாவது புகார்கள் இருந்தால், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு, 04286--281116 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், நாமக்கல், 94450-00233, ராசிபுரம், -94430-00234, சேந்தமங்கலம், -94457-96437, மோகனுார், -94999-37026, கொல்லிமலை-, 94457-96436, திருச்செங்கோடு,- 94450-00235, ப.வேலுார், -94450-00236, குமாரபாளையம், -94457-96438 ஆகிய மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

