/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாரச்சந்தை ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை: அதிகாரிகள் ஆலோசனை
/
வாரச்சந்தை ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை: அதிகாரிகள் ஆலோசனை
வாரச்சந்தை ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை: அதிகாரிகள் ஆலோசனை
வாரச்சந்தை ஏலத்தை ரத்து செய்ய கோரிக்கை: அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜூன் 23, 2025 05:07 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்., சுல்தான்பேட்டையில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடக்கிறது. ப.வேலுார், பாண்டமங்கலம், பொத்-தனுார், கபிலர்மலை, வெங்கரை, பரமத்தி, ஜேடர்பாளையம் உள்-ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக விவசாயிகளிடம் இருந்து சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம், கடந்தாண்டைவிட அதிகமாக இருப்பதாக விவ-சாயிகள் புகாரளித்தனர். இதையடுத்து சுங்கவரி கட்டணத்தை ஆய்வு செய்து, குறைப்பதற்காக ப.வேலுார் டவுன் பஞ்., அலுவ-லகத்தில், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, ப.வேலுார் தாசில்தார் முத்-துக்குமார், டவுன் பஞ்., இணை இயக்குனர் குருராஜன், ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம், ப.வேலுார் வாரச்சந்தை ஏலத்திற்கு தீர்மானம் கொண்டு வந்தபோது, பொறுப்பில் இருந்த செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன் உள்பட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
முடிவில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி கூறுகையில், ''விவ-சாயிகளின் கோரிக்கையை, மாவட்ட அதிகாரியிடம் அறிக்கை-யாக தரப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதன் முடிவு அறி-விக்கப்படும்,'' என்றார்.