/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பண்டமாற்று முறை வாணிபத்தால் பொருளாதார நெருக்கடி அபாயம்
/
பண்டமாற்று முறை வாணிபத்தால் பொருளாதார நெருக்கடி அபாயம்
பண்டமாற்று முறை வாணிபத்தால் பொருளாதார நெருக்கடி அபாயம்
பண்டமாற்று முறை வாணிபத்தால் பொருளாதார நெருக்கடி அபாயம்
ADDED : ஜன 14, 2024 12:28 PM
நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
மத்திய பா.ஜ., அரசு, 2023ம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என அறிவித்தது. 10 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளின் வளர்ச்சிக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இன்னல்களான வறட்சி, புயல் மழை, பெருவெள்ளம் மற்றும் கொரோனா தொற்று ஆகிய காலங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்து, விவசாயம் முற்றிலும் அழிந்து நாசமாகி விட்டது.
இதுபோன்ற சமயங்களில், மத்திய அரசு வெறும் கண்துடைப்புக்காக வல்லுனர் குழுவை அனுப்பி, பயிர் சேதங்களை ஆய்வு செய்து அறிக்கை பெற்றாலும், அது விரலுக்கு இறைத்த நீர் போல்தான் உள்ளது. விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் மற்றும் பண்ணை சாரா கடன் முழுவதும் தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றாமல், அவர்களை தற்கொலைக்கு துாண்டுகிறது.
ஆனால், கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்வதோடு, வரிச் சலுகையும் அளிக்கிறது. கர்நாடகாவிடம் இருந்து, தமிழகத்துக்கு உரிய காவிரி நதி நீரை பெற்று தரவில்லை என்பதோடு, விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியான ஆதார விலையையும் அறிவிக்கவில்லை. மத்திய அரசு தனது 10 ஆண்டு ஆட்சியில், விவசாயிகளை வஞ்சிக்க மட்டுமே செய்துள்ளது.
விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், வரும் காலங்களில், விவசாயிகள் ஒன்று திரண்டு, தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்து, உணவு பஞ்சத்தை உண்டாக்குவதோடு, தங்களுக்குள் பண்டமாற்று முறையில் வாணிபம் செய்து, பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

