/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வைகாசி விசாக தேர் திருவிழா நிறைவு
/
வைகாசி விசாக தேர் திருவிழா நிறைவு
ADDED : ஜூன் 15, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.கோடு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடக்கும் விழாவின், பத்தாம் நாள் தேர் திருவிழா, கடந்த, 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்தது.
14 நாட்கள் வெகு விமரிசையாக நடந்த தேர் திருவிழாவின் நிறைவாக, நேற்று அதிகாலை கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு கால் மண்டபத்தில் ஊஞ்சலாடி, ருத்ராட்ச மண்டபத்தில் மாலை மாற்றி அதிகாலை இருள்பிரிய பரிவார மூர்த்திகளுடன் திருமலைக்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.