/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு; ஆர்.டி.ஓ., விசாரணை
/
சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு; ஆர்.டி.ஓ., விசாரணை
சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு; ஆர்.டி.ஓ., விசாரணை
சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு; ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : செப் 26, 2025 01:56 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், அண்ணாநகரை சேர்ந்த திருமணமான இளம் பெண் துாக்கிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.
ஈரோடு அருகே வெள்ளித்திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார், 23, அதே பகுதியை சேர்ந்த பிரகசிதா, 21, ஆகியோர் காதலித்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர்கள், பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லுார் அண்ணாநகர் பகுதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
திணேஷ்குமார் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த, 6ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் பிரகசிதா மனவேதனை அடைந்து, தினேஷ்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில், துாக்குமாட்டி கொண்டார். வெளியில் சென்றிருந்த தினேஷ்குமார் வீட்டிற்குள் வந்தபோது, பிரகசிதா துாக்குமாட்டி உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனே மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி
பிரகசிதா இறந்தார்.
இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி, ஒன்றரை ஆண்டு மட்டுமே ஆனதால், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அங்கித்குமார்ஜெயின் விசாரணை செய்து வருகிறார்.