/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கும்மியாட்டம் அரங்கேற்றம்; 250 பேர் ஆடி அசத்தல்
/
கும்மியாட்டம் அரங்கேற்றம்; 250 பேர் ஆடி அசத்தல்
ADDED : ஜன 24, 2024 12:54 AM

அன்னூர்;அன்னூரில் கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் 250 பேர் ஆடி அசத்தினர்.
அன்னூர், ஜீவா நகரில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என 250 பேருக்கு கடந்த ஒரு மாதமாக பல்லடம், வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், கும்மியாட்டம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து கும்மியாட்டம் அரங்கேற்றம் அன்னூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறுவர், சிறுமியர், பெண்கள் என 250 பேர் நாட்டுப்புறப் பாடல்களுக்கும், வள்ளி முருகன் திருக்கல்யாண பாடல்களுக்கும் நளினமாக மூன்று மணி நேரம் ஆடி அசத்தினர். நிகழ்ச்சியில், ஆசிரியர் பழனிச்சாமி, இணை ஆசிரியர் ரங்கநாதன் கவுரவிக்கப்பட்டனர்.
ஜீவா நகர், அன்னூர், குமாரபாளையம், எல்லப்பாளையம், நல்ல கவுண்டம் பாளையம், பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர்.

