/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லாருக்கு 3 நாட்களில் 2,742 பேர் வருகை
/
கல்லாருக்கு 3 நாட்களில் 2,742 பேர் வருகை
ADDED : ஜன 19, 2024 12:25 AM
மேட்டுப்பாளையம் : பொங்கல் விடுமுறை காரணமாக நீலகிரி வந்த சுற்றுலா பயணியர், கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணைக்கும் படையெடுத்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில், எலுமிச்சை, கொய்யா, மாதுளை, பலா, திராட்சை, மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மிளகு கிராம்பு, ஜாதிக்காய் இலவங்கப்பட்டை போன்றவை பயிரிடப்படுகின்றன. தரமான மர நாற்றுக்கள் ரூ.10 முதல் 20 வரை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இப்பண்ணை இயற்கை சூழலில் அமைந்துள்ளதால், சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது. தட்ப வெப்ப நிலை மிதமாக உள்ளதாலும், சுற்றிலும் மரங்கள் உள்ளதாலும், ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணியர் வந்து மகிழ்கின்றனர்.
பொங்கல் தொடர் விடுமுறையால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, ஊட்டி, குன்னுார், கோத்தகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் பலர், கடந்த 15, 16, 17ம் தேதிகளில், இப்பண்ணையை பார்வையிட்டுள்ளனர்.
இதுகுறித்து, பண்ணை மேலாளர் மோகன்ராம் கூறுகையில், ''மூன்று நாட்களில் 2,742 பேர், பண்ணையை பார்வையிட்டுள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.20ம், குழந்தைகளுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மூன்று நாட்களில். ரூ.50 ஆயிரத்து 590 வருவாய் கிடைத்துள்ளது,'' என்றார்.

