/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதாள சாக்கடை அடைப்பால் வழிந்தோடும் கழிவு நீர் கண்டுகொள்ளாத நகராட்சி

ADDED : ஜன 24, 2024 01:17 AM

ஊட்டி;ஊட்டி நகரில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இதில், 28 வார்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரும்பாலான வார்டுகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாயில் கழிவுகள் சிக்கி ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது,
இந்நிலையில், ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் சாலையில் தேங்கி அப்பர் பஜாரிலிருந்து லோயர் பஜார் வரை வழிந்தேடுகிறது.
கடந்த நான்கு நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
பொதுமக்கள் கூறுகையில்,''பிரதான சாலையில் கடந்த மூன்று நாட்களாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தேங்கியுள்ள கழிவுநீரால் பாதசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, அடைப்பு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்து முழுமையாக சரிசெய்ய வேண்டும்,'' என்றனர்.