/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தன் ஓவியத்தை பார்த்து அதிர்ச்சியான காட்டு யானை; தும்பிக்கையால் தொட்டுபார்த்து சாந்தமடைந்து சென்றது

ADDED : செப் 18, 2025 09:00 PM

கூடலுார்; முதுமலை மசினகுடி வன சோதனை சாவடி அருகே, ஓவியமாக வரைந்த தனது உருவத்தை பார்த்து, திடீரென அதிர்ச்சி அடைந்த காட்டு யானை, பின் சாந்தமாகி, ஓவியத்தை தொட்டு பார்த்து சென்றது.
முதுமலை தெப்பக்காடு -மசினகுடி சாலை வன சோதனை சாவடி அருகே தனியாக அமைக்கப்பட்டுள்ள, சுவரில் காட்டு யானை உருவம் தத்ரூப ஓவியமாக வரைப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வனச்சோதனை சாவடி அருகே, சாலையை கடந்து வந்த காட்டு யானை, சுவரில் உள்ள யானை ஓவியத்தை பார்த்து திடீரென அதிர்ந்து நின்றது.
பின் சாந்தமாகி அருகே சென்று, ஓவியத்தில் உள்ள தனது உருவத்தை தும்பிக்கையால் தொட்டு பார்த்து நின்றது. அதன் பின், வனப்பகுதிக்கு சென்றது. யானையின் இச்செயலை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தோடு ரசித்தனர். இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.