/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: சாதித்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 04, 2025 09:36 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1980--90ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள், சந்தித்து தங்களது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது உள்ள சூழல் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். மேலும், கடந்த கல்வியாண்டில் அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து, 'முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்; பொது தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்கள் மற்றும், முன்னாள் மாணவர்கள் குடும்பத்தில் சாதிக்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுப்படும்,' என, முடிவு செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை, மனோகரன், ஜெயக்குமார், நவரத்தினம், ஜெயசீலன், முகமது உஸ்மான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.