/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடிமருந்து தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி
/
வெடிமருந்து தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி
ADDED : அக் 20, 2025 10:02 PM
குன்னூர்: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள் நேற்று அதிகாலை புகுந்த கரடியை நாய்கள் விரட்டி சென்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவு தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
நேற்று அதிகாலை அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்த கரடி, சுவரின் மீது ஏற முயற்சித்தது. அங்கிருந்த நாய்கள் கரடியை விரட்டிச் சென்றன.
வளாகத்தில் உள்ள கே.வி., பள்ளி வழியாக சென்று கரடி வெளியேறியது. 2 நாட்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பெட்டி கடையின் கதவை உடைத்த கரடியை நாய்கள் விரட்டியதால் பொருட்களை நாசம் செய்யாமல் ஓட்டம் பிடித்தது.
அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் மற்றும் இரவு நேர காவலர்கள் அச்சமடைந்துள்ளனர். கரடியை, கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

