/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'உழவன் செயலி' பதிவிறக்கம் :விவசாயிகளுக்கு அழைப்பு
/
'உழவன் செயலி' பதிவிறக்கம் :விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 23, 2024 12:16 AM
கூடலுார்;கூடலுார், பந்தலுார் பகுதிகளில், விவசாயிகள் 'உழவன் செயலியை' பதிவிறக்கம் செய்து பயன்பெற அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம், செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விவரங்கள் விவசாயிகள் எளிதாக அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் 'உழவன் செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி விவசாயிகள், 'உழவன் செயலியை' ஆண்ட்ராய்டு மொபைல் போனில் 'ப்ளே ஸ்டோர்' மூலம் பதிவிறக்கம் செய்து, அதில் விவசாயிகள் குறித்து விபரங்களை பதிவு செய்து பயன்படுத்தலாம்.
இதன் மூலம் உழவர் அலுவலர் திட்டம், மானிய திட்டம், வேளாண் வளர்ச்சி திட்டம், இடுப்பொருள் முன்பதிவு, பயிர் காப்பீட்டு விவரம், உரங்கள் மற்றும் விதை இருப்பு, பயிர் சாகுபடி உட்பட 23 வகையான பயன்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளலாம். தற்போது 'உழவன் செயலி' பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கூடலுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி கூறுகையில்,''தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை திட்டங்கள் அறிந்துகொண்டு திட்டங்களை பயன்பெற விண்ணப்பிக்க அனைத்து விவசாயிகளும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கூடலூர், பந்தலுார் விவசாயிகள், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்களை பெறலாம்,'' என்றார்.

