/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகர் மன்ற அவசர கூட்டம்; முறைகேடு குறித்து விவாதம்
/
நகர் மன்ற அவசர கூட்டம்; முறைகேடு குறித்து விவாதம்
ADDED : ஜூன் 24, 2025 09:54 PM
கோத்தகிரி; கோத்தகிரி நகராட்சி அவசர கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் மோகன் குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும், ' கோத்தகிரி பேரூராட்சியாக இருந்த நேரத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறை கேடு நடந்துள்ளது. பேரூராட்சிகளின் துணை இயக்குனர் அளித்த புகாரின்படி, பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட, 5 அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்து, அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கமிஷனர் மோகன்குமார் கூறுகையில், ''கோத்தகிரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை நகராட்சிக்கான 'சாப்ட்வேர்' ஏற்படுத்தவில்லை. இதனால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் முதற்கொண்டு, பல பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கம்ப்யூட்டர் உட்பட, அனைத்து உபகரணங்களுடன், நகராட்சிக்கான புதிய சாப்ட்வேர் அமைக்க வேண்டும். இதற்கு கவுன்சிலர்களின் ஒப்புதல் கோரப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்துள்ளனர்,'' என்றார்.