ADDED : ஜன 09, 2024 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் இருப்பு, தரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
துானேரி ஊராட்சிக்கு உட்பட்ட, அணிக்கொரை ரேஷன் கடையில் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலை பொது மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்தார்.

