/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முட்டிநாடு கிராமத்தில் போர்வெல் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார்
/
முட்டிநாடு கிராமத்தில் போர்வெல் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார்
முட்டிநாடு கிராமத்தில் போர்வெல் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார்
முட்டிநாடு கிராமத்தில் போர்வெல் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார்
ADDED : மார் 24, 2025 10:48 PM
குன்னுார்;'அதிகரட்டி பேரூராட்சி முட்டிநாடு கிராமத்தில், போர்வெல் அமைத்து குடிநீர் விற்பனை செய்வதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது,' என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் போர்வெல் அமைக்க ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. எனினும், சில இடங்களில், மறை முகமாக போர்வெல் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, படுக தேச கட்சி, நிறுவன தலைவர் மஞ்சை மோகன், மாவட்ட வருவாய் அலுவலருக்கு அளித்த புகார் மனு:
முட்டி நாடு கிராமத்தில் போர்வெல் போடப்பட்டு, தேவையான மின்சார இணைப்பும் பேரூராட்சியின் சம்மதத்துடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இயற்கை நீரோடை அருகில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு வழங்க கூடாது என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது.
இங்குள்ள சுற்றுலா விடுதிகளின் குடிநீர் தேவைக்காகவும் இந்த போர்வெல் பயன்படுத்தி விற்பனை செய்வதாகவும் தெரிய வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், முட்டிநாடு பகுதியில் பெரும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, சுற்றுவட்டார படுக சமுதாய மக்கள் வாழும் கிராமங்களில், போர்வெல் அமைத்த இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.