/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டான்டீ' தொழிலாளர்கள் வீடுகள்; கூரையை சேதம் செய்த யானைகள்
/
'டான்டீ' தொழிலாளர்கள் வீடுகள்; கூரையை சேதம் செய்த யானைகள்
'டான்டீ' தொழிலாளர்கள் வீடுகள்; கூரையை சேதம் செய்த யானைகள்
'டான்டீ' தொழிலாளர்கள் வீடுகள்; கூரையை சேதம் செய்த யானைகள்
ADDED : ஜன 18, 2024 10:09 PM
கூடலுார் : கூடலுார் -- பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பின் மேற்கூரையை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
கூடலுார், பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் (டான்டீ) சரகம் எண்-2பி தொழிலாளர் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி முகாமிட்டு செல்கின்றன.
இவைகள், இரவு நேரத்தில் குடியிருப்புக்கு வந்து செல்வதால் தொழிலாளர்கள் அச்சமுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று, அதிகாலை அப்பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று முகாமிட்டது. காலை, 6:15 மணிக்கு, கூட்டத்திலிருந்த யானை ஒன்று தொழிலாளர் குடியிருப்புக்குள் நுழைந்து, செல்வகுமார் என்பவரின் மேற்கூரையை சேதப்படுத்தியது. தொழிலாளர்கள் சத்தமிட்டு அதனை விரட்டினர்.
இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள தொழிலாளர்கள் கூறுகையில், 'குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிடும் யானைகள், இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.