/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட ஹாக்கி போட்டி: மஞ்சதளா அணி வெற்றி
/
மாவட்ட ஹாக்கி போட்டி: மஞ்சதளா அணி வெற்றி
ADDED : ஜூன் 24, 2025 09:53 PM

குன்னுார்; குன்னுாரில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி மஞ்சதளா அணி வெற்றி பெற்றது.
குன்னுார் 'ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ்' மற்றும் கே.எம்.கே., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
சீனியர் பிரிவில் மஞ்சதளா அணியும், ஜூனியர் பிரிவில் தயான்சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றன. கே.எம்.கே., ஸ்போர்ட்ஸ் கிளப் கார்த்தி நினைவு கோப்பை இறுதி போட்டியை, ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பு துணைத் தலைவர் சுரேஷ்குமார், மூத்த ஹாக்கி வீரர்கள் சண்முகம், சிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஹாக்கி ஆர்வலர்கள் ஐஸ்வர்யா, மணிகண்டன், தேவராஜ், ரமேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
ஜூனியர் அணிக்கான பரிசை, முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் கணேஷ் வழங்கினார். பொருளாளர் ராஜா தொகுத்து வழங்கினார். தொழில்நுட்ப உதவிகளை கிரிரவி வழங்கினார்.