/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்க முடிவு
/
விவசாயிகள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்க முடிவு
ADDED : பிப் 01, 2024 10:25 PM
அன்னுார்;நீலகிரி தொகுதி அளவிலான பா.ஜ., விவசாயிகள் அணி மாநாட்டில், அதிக அளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எல்லப்பாளையம் அலுவலகத்தில் நடந் தது. விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
நீலகிரி எம்.பி., தொகுதியில் உள்ள கூடலூர், ஊட்டி, குன்னுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதியை சேர்ந்த விவசாய அணி நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாடு வருகிற 3ம் தேதி மாலை 3:00 மணிக்கு அன்னுாரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் முருகன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் அனைத்து விவசாய அணி நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கவுரவ நிதி வழங்கி வரும் மத்திய அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. விவசாய அணி மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நிர்வாகிகள் பேசினர்.
நீலகிரி தொகுதி பார்வையாளர் முருகேசன், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நந்தகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

