/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழனி ஆண்டவர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
/
பழனி ஆண்டவர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
ADDED : ஜன 24, 2024 12:56 AM

அன்னூர்;சாளையூரில் குன்றின் மேல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து முதலாம் ஆண்டு பெருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து பழனி ஆண்டவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருக்குட நீராட்டுக்குப் பிறகு, மதியம் பால், தயிர், நெய், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால், பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பேரொளி வழிபாடு நடந்தது. மதியம் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சேரிமலை ஆதீனம், முத்து சிவராம சாமிகள், அவிநாசி சித்தர்பீட சின்னசாமி சாமிகள், வார வழிபாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள், விழா குழுவினர் பங்கேற்றனர்.
சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர், வேள்வி வழிபாடுகளை நடத்தினர்.

