/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கேலோ' இந்தியா விளையாட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு
/
'கேலோ' இந்தியா விளையாட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு
'கேலோ' இந்தியா விளையாட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு
'கேலோ' இந்தியா விளையாட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு
ADDED : ஜன 09, 2024 10:12 PM

ஊட்டி:'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டி குறித்து, ஊட்டியில் போலீசாரின் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும், 19ல் துவங்கி, 31ம் தேதி வரை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய, நான்கு மாவட்டங்களில் நடக்கிறது.
இது குறித்து, பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நீலகிரியில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஊட்டியில் கேலோ இந்நியா விழிப்புணர்வு மராத்தான் நடந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியை, கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்.
மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து, கேலோ இந்தியா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார். அதில், போலீசார் பலர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

