/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் முன்னதாக பூத்த பச்சை ரோஜா; கோடை சீசனுக்கு கண்ணாடியில் வைக்க திட்டம்

ADDED : மார் 25, 2025 07:12 AM

குன்னுார்; குன்னுார் சிம்ஸ்பூங்காவில் முன்னதாக பூத்த பச்சை ரோஜா அனைவரையும் கவர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்கு தயார் செய்யப்படும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், பூங்கா நர்சரியில், ஒரு செடியில் மட்டுமே பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு, 20க்கும் மேற்பட்ட தொட்டிகளில் வளர்க்கப்பட்ட பச்சை ரோஜா செடியில் கோடை சீசனுக்கு முன்னதாக பூக்கள் பூத்துள்ளன.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,'சினென்சிஸ் விரிடிப்ளோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பச்சை ரோஜா, 'கிரீன் கலிக்ஸ், லோக்-லாவ், சீன ரோஜா' எனவும் அழைக்கப்படுகிறது.
இவை தற்போது பூத்துள்ளதால் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வரும் கோடை சீசனுக்காக இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வைக்க, 20 தொட்டிகளில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டுள்ளது,' என்றனர்.