ADDED : ஜன 09, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;துடியலூரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.
நாளை காலை, 5:00 மணிக்கு சிறப்பு ஹோமம், 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நாதஸ்வரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, குமரகுருபர சுவாமிகள் அருளாசியுடன் காலை, 6:30 மணி முதல் மகா அன்னதானம் நடக்கிறது.
காலை, 10:00 மணிக்கு அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம், மாலை, 3:00 மணிக்கு மகா உற்சவர் திருவீதி உலா, 3:30 மணிக்கு சாய் மியூசியோனா பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

