/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கானுார்புதுார் கன்னிமார் கோவிலில் கும்பாபிஷேகம்
/
கானுார்புதுார் கன்னிமார் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 19, 2024 12:23 AM
அன்னுார் : கானுார்புதுார், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம், வரும் 21ம் தேதி நடக்கிறது.
கானுார்புதுாரில் உள்ள பழமையான கருப்பராயன், கன்னிமார் கோவிலில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா நாளை காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 10:30க்கு, கோவிலுக்கு ஊர்வலமாக புற்று மண் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை, கிராம சாந்தி, காப்பு கட்டுதல், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடக்கின்றன. 21ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, 10:00 மணிக்கு கோவில் கோபுரத்துக்கும், கருப்புசாமி, கன்னிமார், தன்னாசியப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அலங்கார பூஜை, தச தரிசனம், தீபாராதனை நடக்கின்றன. ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

