/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
/
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : பிப் 01, 2024 10:21 PM
கோத்தகிரி:கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி சுற்று வட்டாரபகுதிகளில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சமீப காலமாக, சிறுத்தை மற்றும் கரடி உள்ளிட்ட வன விலங்குகள், குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது தொடர்கிறது. வீட்டு வாசலுக்கு வரும் அவை, மொட்டை மாடிகளில் ஏறி விளையாடுவது வாடிக்கையாக உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று முன்தினம், கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, ராயன் தெரு குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, வீட்டில் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த வளர்ப்பு நாயை கவ்வி தூக்கி சென்றுள்ளது. சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து கூச்சல் போட்டபோது, நாயை இழுத்துக் கொண்டு சிறுத்தை அருகில் உள்ள புதருக்குள் மறைந்துள்ளது.
மக்கள் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டத்தால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.

