/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடு கட்ட அனுமதி பெற ஒற்றை சாளர முறை அமைச்சர் முத்துசாமி தகவல்
/
வீடு கட்ட அனுமதி பெற ஒற்றை சாளர முறை அமைச்சர் முத்துசாமி தகவல்
வீடு கட்ட அனுமதி பெற ஒற்றை சாளர முறை அமைச்சர் முத்துசாமி தகவல்
வீடு கட்ட அனுமதி பெற ஒற்றை சாளர முறை அமைச்சர் முத்துசாமி தகவல்
ADDED : பிப் 10, 2024 08:25 PM

ஊட்டி:ஊட்டி, அரசு விருந்தினர் மாளிகையில், நீலகிரி மாவட்டத்தில் கட்டட அனுமதி வழங்குவது தொடர்பாக கட்டுமான துறையினர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய, 'மாஸ்டர் பிளான்' திட்டத்தை இன்றைய நடைமுறைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டுமான துறையை சார்ந்தவர்கள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகள் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு மாற்றுவது குறித்து ஆராயப்படும்.
புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் எளிமையாக அனுமதி பெற, ஒற்றை சாளர முறை நடைமுறைப்படுத்தப்படும்.
மலை மாவட்டத்தில் அரசு சார்பில் கட்டப்படும் வீடுகளுக்கு கட்டுமானத்தில் ஏற்படும் கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு, பிற மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 18 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பட்டா தடை அமலில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு ஒப்புதலுடன் டான்டீ ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டியதைப்போன்று, பத்திரிகையாளர்களுக்கு கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

