/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய மேல்நிலை தொட்டி மக்களின் கோரிக்கைக்கு தீர்வு
/
புதிய மேல்நிலை தொட்டி மக்களின் கோரிக்கைக்கு தீர்வு
புதிய மேல்நிலை தொட்டி மக்களின் கோரிக்கைக்கு தீர்வு
புதிய மேல்நிலை தொட்டி மக்களின் கோரிக்கைக்கு தீர்வு
ADDED : ஜன 24, 2024 01:22 AM
மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள, ஆனைப்பள்ளிபுதூரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்திற்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
காலப்போக்கில் மேல்நிலைத் தொட்டியின், மேல் பகுதி உடைந்து தொட்டியின் உள்ளே விழுந்தது. இந்நிலையில், புதிதாக மேல்நிலைத் தொட்டி, கட்டி கொடுக்க கோரி, பொது மக்கள், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமாரிடமும், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமியிடமும் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து, எட்டு லட்சத்தை மேல்நிலைத் தொட்டி கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை அடுத்து ஆனைப்பள்ளிபுதூரில் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் துவங்கியுள்ளன.
இது குறித்து ஊராட்சி தலைவர் சிவக்குமார் கூறுகையில்,'மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு, புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட, நிதி ஒதுக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தீர்வு கிடைக்கும் வகையில், புதிதாக மேல்நிலைத் தொட்டி கட்டும் பணிகள் துவங்கியுள்ளன, என்றார்.

